பக்கம்:புராண மதங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அண்ணாதுரை 85 எழுதப்பட்டது, இன்று எந்தச் சாஸ்திரியாவது, புரா ணிகராவது பூமி உருண்டை வடிவம் என்று பள்ளிக் கூடங்களிலே போதிக்கப் படுவதைக் கண்டிக்கிறார் களோ? தங்கள் வீட்டுச் சிறுவர்களையாவது, "வேண்டா மடா அந்த விநாசக் கருத்து! வேதபுராண இதிகாசாதி கள், அங்ஙனம் கூற வில்லை அவைகளிலே கூறப்பட்டக் கருத்துக்கு மாறாகச் சொல்லப்படும் பாடம். கேவல நாஸ்திகம்," என்று கூறித் தடுக்கிறார்களோ? "பூமி உருண்டை" என்று போதிப்பவர்களை நாஸ்தீகர்கள் என்று நிந்திக்கிறார்களோ? இல்லை! விட்டுக் கொடுத்து விட்டார்கள். பூமி, தட்டையாகவோ, உருண்டையா கவோ இருக்கட்டும் நமக்கென்ன என்று இருந்துவிட் டார்கள். அல்லது பூமி உருண்டைதான் என்று, ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார். ஆகவே அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்று கூறிச் சமாதானம் பெற்றுவிடுகிறார்கள். ஏன்? இதிலே இலாப நஷ்டக் கணக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை பூமி தட்டையாக இருக்கிறது என்று நம்பினால் தான் தட்சணை , உருண்டை என்று ஊரார் ஏற்றுக்கொண் டால் கிடைக்காது என்ற நிலைமை இல்லை. சுயநலம். இந்தக் கருத்து மாற்றத்தினால் கெட வில்லை. ஆகவே, தாராளமாகப் புதுக் கருத்தை ஏற்றுக்கொண்டு, பழைய கருத்துக்குச் சீட்டு கொடுத்து விடுகின்றனர். ஆனால் வேறு சில கருத்துக்களை மாற்றிக் கொள்ளச் சம்மத மில்லை சுயநலமும் அந்தப் பழைய கருத்தும் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருப்பதால். பூமி உருண்டை என்ற கருத்தை ஏற்றுக் கொண் டால்தான் பூசுரக் கூட்டம் நஷ்டம் காண்ப தில்லை. ஆனால், தேவலோகம், என்று ஒரு தனி இடம் கிடை யாது. இறந்தவர்கள் அங்கு செல்வதும் புரட்டு, அப் படி அவர்களை அங்கே குடி ஏறச் செய்வதாகவே, இங்கு பூதேவருக்குத் தட்சணை தரப்பட்டு சில சடங்கு கள் செய்யப்படுகின்றன இது பொருள் பறிக்கும் தந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/86&oldid=1033325" இலிருந்து மீள்விக்கப்பட்டது