பக்கம்:புராண மதங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புராண - மதங்கள் களை அவர்கள் தமது ஞானக்கண்களால் கண்டறிந்த னர், என்று கூறப்பட்டு, நம்பப்பட்டு வருகிறது. சூரிய தேவனுக்கு வழிபாடும், அதற்கான முறையும் வகுக்கப் பட்டிருக்கிறது. அவர்கள் கண்ட சூரியனுக்கு ஒரு முகம், எட்டுக் கரம்! ஞானக்கண்ணினர் கண்ட காட்சி, கோலாகல மானது! ஏழுகுதிரைகளும் இழுக்க, பாம்புகளும் கூடச் சேர்ந்து இழுக்க, ஆடல் பாடலுடன், அந்தத் தேர் மேருவை வலம்புரிவதைக் கண்டனர் - கண்டோம் என்று கூறினர் - சரி, என்று ஒப்புக்கொண்டவர்கள் உத்தமர்களெனப் பட்டனர், சந்தேகித்தோர், நாத்தீகர் என்று மதிக்கப்பட்டனர்.

இனி, ஞானக்கண்ணினர் கண்ட சூரியன், இன் றைய விஞ்ஞானக் கண்ணினருக்கு எப்படிக் காட்சி அளிக்கிறான், என்பதை கவனிப்போம். கவனிக்க வேண் டியதற்குக் காரணம் பல, அதிலே மிக முக்கியமானது இப்போது நாம் வாழும் நாட்களில், ஞானக் கண்ணின ரின் உதவியை அல்ல , விஞ்ஞானக் கண்ணினரின் உதவி யையே, பெரிதும் பெறுகிறோம். இரு கண்ணினருக் கும்' உள்ள மாறுதல், ஒருபுறமிருக்க, வேறோர் உண் மையை உணரவேண்டுகிறோம். ஞானக்கண்ணினர், கண்டதாகக் கூறும் சூரிய தேவனின் கோலத்தை, இங்கே உள்ள பாமரர் மட்டும் தான் ஏற்றுக்கொண் டுள்ளனர் - உலகிலே வேறு எங்கும், சூரியனுக்கு உள்ள கரம் எட்டு , முகம் ஒன்று, தேவி இரண்டு , என்று கூறு வார் இல்லை, இங்கேயும், ஞானக்கண்ணினர் காட்டிய சூரியனை, நம் வீட்டுப் பள்ளிச்சிறாரும், காண்பதில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/93&oldid=1033332" இலிருந்து மீள்விக்கப்பட்டது