பக்கம்:புராண மதங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ண்ணாதுரை புது உண்மைகளை மறுத்துப் பேச முடியாத நிலை அந்தப் புது உண்மைகளின் விளைவுகளால் கடைக்கும் பலன்களை விட்டுவிட மனமில்லாத நிலை யும், அதேபோது, பழைய பாசத்தை நீக்கிவிடத் தைரியமற்ற நிலையும் ஒன்று சேர்த்து நமது நாட்டு மக் களில், விஷயம் தெரிந்தவர்களைக் கூட விசித்திர மனி தர்களாக்குகிறது! கிரஹணத்துக்கு, விடுமுறையும் விடு கிறது நமது சர்க்கார் - பழைய ஐதீகத்தின்படி - வான மண்டல ஆராய்ச்சி நிலையத்துக்குப் பணமும் செலவிடு கிறது, புது உண்மையை உதறித் தள்ள முடியாததால். கிரஹ தோஷம் போக, எள்ளு எத்தனை படி தேவை, கொள்ளு எவ்வளவு வேண்டும், பாக்கு எத் தனை, வெற்றிலை எத்தனை , பணம் எவ்வளவு, என்ற கணக் கெடுத்துக் கொண்டு, வாழ்க்கையை நம்மவர் கள் அமைத்துக்கொண்டிருந்த நாட்களில், அங்கு அறி ஞர்கள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் கணித்துக் கொண் டிருந்தனர். கண்ணாலே காணக் கூடியது சுமார் ஆறாயிரம். தொலை நோக்கி மூலம் கண்டறியக் கூடியவை சுமார் ஐந்து இலட்சம் நட்சத்திரங்கள்! இவைகளை கணக் கெடுத்து மட்டு மல்ல, பட மெடுத் தும் காட்டி யிருக்கிறார்கள், இப்போது கைவசம் உள்ள தொலை நோக்கிக் கருவியை விட, மேலான முறையிலே தயாரித்தால், மேலும் பல இலட்சம் நட் சாத்திரங்களைக் காணக் கூடும் என்றும் எண்ணுகிறார் கள் - அதற்கான ஆராய்ச்சியும் நடத்துகிறார்கள். பூமியின் வடிவம் தட்டை , அதைத் தாங்கும் ஆதி சேஷனுக்குத் தலை ஆயிரம், பூமி ஒரு தேவி, பொறு மைக் குணமே அவள் பூஷணம், என்று கதை பேசுவ துடன், நமது அறிவுத் தாகம் அடங்கிவிட்டது, அங்கு அறிஞர்கள், இதுபோலக் கதைகள் பேசிக் களிப் படைந்துவிட வில்லை - ஆராய்ச்சி நடத்தினர் - விஞ் நானியின் கண்களிலே, நமது நாட்டு ஞானக் கண் ருக்குத் தெரிந்த ஆயிரம் தலை நாகமும் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/98&oldid=1033337" இலிருந்து மீள்விக்கப்பட்டது