பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



131. வேள் ஆய் அண்டிரன்

அழகு மிக்க இந்தக் காடு ஆய் அண்டிரன் குன்றத்தைச் சிறப்பித்துப் பாடியதோ? இங்கு யானைகள் மிக்கு உள்ளனவே!

மழை பெய்யும் மேகங்கள் மிக்குத் தவழும் மாமலைக்கு உரியவன்; சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்துள்ளான். வாள் ஏந்திய வீரன் அண்டிரன். அவன் மலையைச் சிறப்பித்துப் பாடித்தான் இந்தப் பரிசை இந்தக் காடு பெற்றிருக்க வேண்டும்.

மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், குன்றம் பாடினகொல்லோகளிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

132. வேள் ஆய் அண்டிரன்

ஆய் அவன் பெருமை அதனை அறியாமல் வறிதே காலத்தைக் கடத்தி விட்டேன். என் நா பிறர் புகழ் பேசியது, செவி பிறர் புகழைக் கேட்டுக் கொண்டிருந்தது. மாபெரும் தவறுகள் இழைத்து விட்டேன்.

நரந்தையையும், நறிய புல்லையும் மேய்ந்த கவரிமான் குவளைப் பூக்கள் மலிந்த சுனை நீரைப் பருகிவிட்டுத் தகரமரத்துத் தண்ணிழலில் தன் பெண்மானோடு தங்கும் இமயம் வடதிசைக் கண் உள்ளது. வடக்குக்குச் சிறப்பு வானை அளாவும் இமயம்.

அதே போலத் தெற்குக்குப் பெருமை தருவது ஆய் அண்டிரன் புகழ், அவன் குடி இங்கு இல்லை என்றால் வடதிசை உயர்ந்து இருக்கும்; தென்திசை தாழ்ந்து போய் இருக்கும்.

ஆய்குடி இங்குத் தென்திசையில் இல்லை என்றால் உலகம் ஒரு பக்கம் சாய்ந்து நிலைகுலைந்து இருக்கும். வடக்கு உயர்ந்து இருக்கும்.