பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

153

முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! ஆழ்க, என் உள்ளம் போழ்க, என் நாவே! பாழ் ஊர்க் கிணற்றின் துர்க, என் செவியே!நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ் சுனை பருகி, அயல தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் வட திசையதுவே வான் தோய் இமயம். தென் திசை ஆஅய் குடி இன்றாயின், பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே

திணையும் துறையும் அவை.

அவனை அவர் பாடியது.

133. வேள் ஆய் அண்டிரன்

மெல்லிய இயல் உள்ள விறலியே! நல்லிசை என்பதைக்

கேட்டு அறிந்திருக்கலாம். அதனை நீ கண்ணால் பார்க்க வேண்டுமா? புகழ் என்பது யாது? அதற்கு வடிவம் உள்ளதா? அதை நேரில் காண முடியுமா?

உனக்கு நேரில் காட்டுகிறேன். நீ அதைப் பார்க்க

வேண்டுமா?

மணம் வீசும் கூந்தல் அது காற்றில் அலையத் தோகையை

உடைய மயிலைப் போல் மெல்ல நடந்து ஆயைக் காணச்

செல்குவாய். மாரி அன்ன வண்மை உடையவன். தேர் வேள் ஆய் அவனைக் காணச் செல்க. புகழ் வடிவினன் அவன்; அவனைக் கண்டால் நீ சிறப்புகள் பெறுவாய்.

மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; காண்டல் வேண்டினைஆயின்-மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரை வளி உளரக் கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!

திணை - அது துறை - விறலியாற்றுப்படை

அவனை அவர் பாடியது.