பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



160. குமணன்

காய்ந்து உலர்ந்து கிடக்கும் புல் தழைக்க இடியுடன் கூடிய பெரு மழை பொழிவது போலப் பாண் சுற்றத்தினர் மகிழ்வு எய்தினர் என்றும், வானில் சந்திரனைச் சுற்றி நட்சத்திரக் கூட்டங்கள் வட்டமிடுவதைப் போலப் பெரிய தட்டு அதைச் சுற்றிச் சிறு கிண்ணங்களில் நெய் கலந்த சோறும் கொழுவிய இறைச்சியும் சூடு ஆறாமல் அவர்களுக்குத் தந்து மகிழ்வித்தான் என்றும், மற்றும் அவர்களுக்குப் பொன் ஆபரணங்களும் தந்து அனுப்பினான் என்றும், குமணன் முதிரமலைக்குத் தலைவன் என்றும் அறிவுறுத்தினார்கள்

நீயும் சென்றால் அவன் செல்வம் தருவான் என்று கூறி வழி அனுப்பினர். உன் புகழைப் பலரும் எடுத்துப் பேச யான் வந்தனன்.

வீட்டிலே உணவு இன்மையால் குழந்தைச் சிறுவன் வீட்டுப் பக்கமே தலைகாட்ட மாட்டான். பசி பொறுக்காமல் தன் தாயின் வற்றிய முலையைச் சுவைத்துப் பார்ப்பான். பால் பெறாமையால் கூழும் சோறும் கிடைக்குமா என்று துழாவிப் பார்ப்பான். உள்ளே வெறிச் சென்று கிடக்கும் வெற்றுப் பாத்திரம். அதைப் பார்த்து அழ அதை நிறுத்த முடியாமல் அவள் தாய் அவனைப் புலி, புலி’ என்று அச்சுறுத்திப் பார்ப்பாள் ஆகாயத்தில் அம்புலியைக் காட்டி இன்புறுத்த நினைப்பாள். இரண்டுக்கும் அவன் மசிய மாட்டான். ‘உன்தந்தையை வெறுத்துக்காட்டும் சுளித்த உன் முகத்கை காட்டு'என்று அவனைத் திருப்ப முயல்வாள். அதற்கும் அவன் படிய மாட்டான். அவனைத் தணிப்பது எப்படி என்று அறிய மாட்டாது வருந்துவாள். அவள் துன்பம் தீர அவள் வளம் பெற்று வாழ மிக்க செல்வம் தந்து என்னை அனுப்பி வைக்க உன் புகழைப் பலவாறு ஏத்திப் பாடுவேன்.

‘உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த முளி புற் கானம் குழைப்பக், கல்லென அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்குப், பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை அவிழ் புகுவு அறியாது.ஆகலின், வாடிய