பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

23


அதுமட்டும் அன்று தனி மனிதன் அவன் உயர்வுக்கும்

தாழ்வுக்கும் வாழ்க்கை இயக்கம் பொறுப்பு என்ற அழகான

கருத்தையும் தருகிறது இந்தப் பாடல்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன; சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின், இன்னா தென்றலும் இலமே, ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படுஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தண்ம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” - 192

புகழ் பட வாழ்க

உன் சுற்றத்தவரை மகிழ்விக்க; நீ இசையுடன் வாழ்க என்று

அறிவிக்கிறது ஒரு பாடல். பிறரை வாழ்விக்க உதவுக, நீயும்

இசையுடன் வாழ்க என்பது புறநானூறு தரும் செய்தியாகும்.

“நகைப்புறன் ஆகநின் சுற்றம்;

இசைப்புற னாகநீ ஓம்பிய பொருளே 25-26/29

புகழ்பட வாழ்க, ஈதல், இசைபட வாழ்தல்; இதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை இது அறிவுறுத்துகிறது.

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று’

என்பது புறம் கூறும் வாழ்க்கை அறம்; உயர் குறிக்கோளும் ஆகும். தமிழர்தம் கோட்பாடு வாழ்வதன் நோக்கம் பிறருக்குப் பயன்படுதல் என்பதை வற்புறுத்துகிறது.