பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



புறநானூறு செய்யுளும் செய்திகளும்

1. கடவுள் வாழ்த்து

கங்கையைச் சடைமுடியில் தரித்தவன்; அரிய தவத்தினன்.

அவன் சூடி இருக்கும் தலைமாலை கொன்றைப் பூ அது கார் காலத்தில் மலர்வது; நறுமணம் மிக்கது. அதனையே அவன் மார்பிலும் அணிந்துள்ளான்.

அவன் ஊர்தி வெள்ளை நிறத்து எருது; அதுவே அவன் தாங்கிய கொடியும் ஆகும்.

நீல நிறத்துக் கறை அவன் கழுத்துக்கு அழகு தருகிறது. மறையவர்கள் அதனைப் போற்றிப் புகழ்கின்றனர். -

பெண் அவன்பால் ஒரு கூறு ஆகும்; அதனை மறைத்து முழுவடிவிலும் அவன் விளங்குகிறான்.

பிறையை அவன் முடியில் தரித்து உள்ளான். அது அவன் நெற்றிக்கு அழகு தருகிறது. அதனைப் பதினெட்டுக் கணத்தவ்ர் ஏத்திப் புகழ்வர்.

பாடல்

கண்ணி கார் நறுங் கொன்றை, காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை: ஊர்தி வால்வெள் ஏறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப; கறை மிடறு அணியலும் அணிந்தன்று: அக் கறை, மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே: பெண் உரு ஒரு திறன் ஆகின்று அவ் உருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்: பிறை,நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமேஎல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீர் அறவு அறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந் தவத்தோற்கே.

பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.