பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

நிலத்தைப் போல் பொறுமையும், ஆகாயத்தைப் போல் விரிந்த அறிவும், காற்றைப் போல் வலிமையும், நெருப்பைப் போல் அழிக்கும் திறனும், நீரைப்போல் அருள் செய்தலும் உன்பால் உள்ள அரிய பண்புகளாகும்.

கிழக்கிலும் மேற்கிலும் நீள் கடல்கள் உன்நாட்டு எல்லைகள். பரப்புமிக்க நாடு உனது; வானவரம்பன்’ என்று உன்னைச் சிறப்பிப்பர்.

பாரதப் போரில் பாண்டவர் சேனைக்குப் பெருஞ்சோறு வரையாது அளித்தாய். உன் கொடைச் சிறப்புப் போற்றத் தக்கதாகும்.

பால் புளித்தாலும், பகலில் இருள்தோன்றினாலும், வேதங்கள் நான்கு இவற்றின் நெறி மாறுபட்டாலும் நிலைதிரியாத நல் அமைச்சர்கள் அவர்களைத் துணையாகக் கொண்டு ஆட்சி செய்க மலை அடுக்குகளில் பெண்மான் தன் குட்டியுடன் அந்திப்பொழுதில் அந்தணர் செந்தீ வளர்க்கும் ஒளியில் துயில் கொள்ளும் இமயம் போலவும் மற்றும் பொதிகை போலவும் நிலைத்து வாழ்க! புகழோடு விளங்கி நீ நீடுழி வாழ்க.

மண் திணிந்த நிலனும்,

நிலன் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்,

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம் பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,

வலியும், தெறலும், அளியும், உடையோய்!

நின் கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்

வெண் தலைப் புணரிக் குட கடற் குளிக்கும்,

யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!

வான வரம்பனை நீயோ, பெரும!

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினை.இ,