பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை ஈர்-ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழியப் பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேத நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, நடுக்கின்றி நிலியரோ அத்தை - அடுக்கத்துச் சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, அந்தி, அந்தணர் அருங் கடன் இறுக்கும் முத் தீ விளக்கின், துஞ்சும் பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

திணை - பாடாண் திணை துறை - செவியறிவுறுஉ வாழ்த்தியலும் ஆம்

சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்

பாடியது.

3. பாண்டியன் கருங்கை

ஒள்வாள் பெரும் பெயர் வழுதி

உன் முன்னோர்கள் புகழ்மிக்கவர்கள், செங்கோன்மையும் கொடைச் சிறப்பும் உடையவர்கள்; அவர்கள் வழிவந்தவன் நீ!

கற்பிற் சிறந்த மனைவி உனக்கு வாய்த்தவள். இல்லற வாழ்வு பெருமையுடன் விளங்குகிறது; பெருங்கை யானையின் பிடரியில் இருந்து கூற்றுவனைப் போல் பகைவர்களைச் சாய்க்கும் திறன் படைத்தவன் நீ. கருங்கையில் ஒள்வாள் ஏந்திய புகழ்மிக்க பேரரசன் நீ.

நிலம் பெயர்ந்தாலும் நின்சொல் பெயராது வாழ்க! உறுதியுடன் வாழ்வது உயர்வு அளிக்கும்.

மற்றும் வழிபறிக் கொள்ளையர் அம்பு கொண்டு வீழ்த்த அவர்கள் தசையைத் தின்னப் பருந்துகள் உன்ன மரத்துக் கிளையில் காத்துக் கிடக்கின்றன; அத்தகைய அரிய நீண்ட வழிகளைக் கடந்து உன்னை இரவலர் காண வருவர். குறிப்பறிந்து அவர் இன்மை தீர்த்து உதவுக, இதுவே யான் வேண்டுவது.