பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



திணையும் துறையும் அவை,

கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்துக் கூடலூர் கிழார் பாடியது.

230. அதியமான் எழினி

அவன் ஆட்சி நாட்டில் செயல்பட்டபோது கன்றுடன் கூடிய பசுக் கூட்டத்துக்குக் காவலே தேவை இல்லை.

வழிபறிக் கொள்ளையர்தம் அழிபயம் இன்றி வழிநடை நடந்தனர் புதியவர்கள்.

நெற்களத்தில் குவித்து வைக்கப்பட்ட நெல் குவியல் அதற்குக் காவலே தேவைப்படவில்லை.

காட்டு விலங்குகளால் ஏற்படும் உயிர் அச்சம் முற்றும் நீங்கியவராய் வாழ்ந்தனர்.

இத்தகு செங்கோல் ஆட்சியும், வையகம் புகழும் போர் வெற்றிகளும் உடையவனாகத் திகழ்ந்தவன் எழினி. அவன் பொருது களத்தில் விழுந்து மடிந்தான்.

பெற்றவள் கைவிட்ட குழந்தையைப் போல அவன் சுற்றத்தவர் பலரும் வருந்தி உழன்று வாடுகின்றனர். துன்பத்தில் உழல் கின்றனர்.

இவர்களைவிடக் கூற்றுவனே! நீதான் மிகவும் இழந்து இருக் கிறாய். விதைக்கு வைத்திருந்த நெல்லை அவசரப்பட்டு ஆக்கிச் சமைத்து அழிக்கிறான் ஒர் உழவன்; வாடுவது அவன்; அவ் அறிவற்ற உழவனாக நீயும் செயல்பட்டு விட்டாய். போர்க் களத்தில் பகைவர்கள் தம் உயிர்களை அவன் ஒருவனே கவர்ந்தான். இனி யார் உனக்கு இந்தப் பணியைச் செய்ய ώ)Jώυώυ ΤΤ?

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் களம் மலி குப்பை காப்பு இல வைகவும், விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்,