பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

253



பொய்யா எழினி பொருது களம் சேரஈன்றோள் நீத்த குழவி போலத், தன் அமர் சுற்றம் தலைத்தலை இணையக், கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் வீழ் கூடி உழவன் வித்து உண்டாஅங்கு ஒருவன் ஆர் உயிர் உண்ணாய்ஆயின், நேரார் பல் உயிர் பருகி, ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.

திணை - அது; துறை - கையறு நிலை அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது

231. அதியமான் நெடுமான் அஞ்சி

கொல்லை நிலத்தில் எரித்துச் சுட்டுக் குறவன் விட்டுச் செல்லும் மரத் துண்டுகள் போல நறுக்கி அடுக்கப்பட்ட விறகுக் கட்டைகள் அவற்றில் தீயிட்டு ஈம அழல் எழுப்பி அவனை வைத்து எரிக்கத் தொடங்கி உள்ளனர்.

அந்த ஈம ஒள்ளழல் குறுகட்டும் அல்லது நீள எரியட்டும். அவன் உடம்பைத் தான் அது எரிக்க முடியும்.

திங்களைப் போன்ற வெண் கொற்றக் குடையையும், ஞாயிறு போல் ஒளியையும் உடைய அவன் புகழ் என்றும் மாயாது. அதனை அழிக்க முடியாது. நிலைத்து நிற்கும்.

எறி புனக் குறவன் குறையல் அன்ன கரி புற விறகின் ஈம ஒள் அழல், குறுகினும் குறுகுக; குறுகாது சென்று. விசும்புற நீளினும் நீள்க-பசுங் கதிர்த் திங்கள் அன்ன வெண்குடை ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே.

திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.