பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



232. அதியமான் நெடுமான் அஞ்சி

அவன் இல்லாமல் இந்தக் காலைப் பொழுது தேவையற்றது; அது இல்லையாகிப் போகட்டும். அதேபோல என் வாழ்நாளும் இல்லையாகிப் போகட்டும். யான் இனி வாழ்ந்து என்ன பயன்?

அவன் வாழ்ந்த காலத்தில் சிகரத்தை உடைய மலைகள் கொண்ட நாட்டை அவனிடம் கொடுத்தாலும் ஏற்க மறுப்பான்; அதனைக் கொள்ள மாட்டான்; அத்தகைய பேராண்மை உட்ையவன்; இவர்கள் நடுகல் நட்டு அதற்குப் பீலி சூட்டி நாரால் வடிக்கப்பட்ட கள்ளைச் சிறு கலத்தில் வைக்க அவன் அதனை எங்கே ஏற்கப் போகிறான்!

இல்லாகியரோ, காலை மாலை! அல்லாகியர், யான் வாழும் நாளே! நடுகல் பீலி சூட்டி, நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோகோடு உயர் பிறங்கு மலை கெழீஇய நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே?

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

233. வேள் எவ்வி

“பாணர்களின் சுற்றத்தவரைப் பேணிக் காக்கும் தலைவன் போர்ப் படைமிக்க எவ்வி, மார்பில் வேல் பாய்ந்து விழுப்புண் எய்தினான்; சாகக் கிடக்கிறான்’ என்று விடியல் பொழுதில் செய்திகள் பரப்பி உள்ளனர். அவை உண்மையாக இல்லாமல் இருக்க வேண்டும்.

இதுபோல் முன்பு ஒரு காலத்தில் பேரரசர்கள், “அகுதை என் பானிடத்துப் பொன் திகிரி உள்ளது; அது இருக்கும் வரை அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று செய்தி பரப்பி இருந்தனர். அவன் மறைவிற்குப் பின் அது வெறும் பொய்; தவறான செய்தி என்று அறிந்தனர்.