பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

255


அதுபோல இந்தச் செய்தியும் பொய் ஆகிவிட வேண்டும். இதுதான் யான் வேண்டுவது.

பொய்யாகியரோ பொய்யாகியரோ! பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், போர் அடு தானை, எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பல என வைகுறு விடியல், இயம்பிய குரலே.

திணையும் துறையும் அவை.

வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

234. வேள் எவ்வி

அடையா நெடுங்கதவு கொண்ட பெருமனையில் பாணர் சுற்றத்தினர் பலருடன் உண்ட பார் வேந்தன் இன்று தன் காதல் மனைவி பிடியின் கால் அடி அளவு உள்ள சிறிய இடத்தை மெழுகிப் புல்மேல் வைத்த சிறிய உணவை எவ்வாறு உண்பான்?

இந்தக் கொடிய காட்சியைக் காணும் என் நெடிய வாழ்நாள் கெடுவதாக;யான் மடிவதாக!

நோகோ யானே? தேய்கமா காலை!

பிடி அடி அன்ன சிறு வழி மெழுகித்,

தன் அமர் காதலி புல் மேல் வைத்த

இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்

உலகு புகத் திறந்த வாயில்

பலரோடு உண்டல் மரீஇயோனே?

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

235. அதியமான் நெடுமான் அஞ்சி அவன் வாழ்ந்த நாட்கள் அவற்றை நினைவு கூர்கிறேன்.

கள் சிறிது மட்டும் பெறுகிறான் என்றால் அவன் தான் அதைப் பருகாமல் எனக்குத் தந்து மகிழ்வான்.