பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

257



அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ இரப்போர் கையுளும் போகிப், புரப்போர் புன்கண் பாவை சோர, அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று, அவன் அரு நிறத்து இயங்கிய வேலே! ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? இனிப், பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப் பலவே!

திணையும் துறையும் அவை. அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

236. வேள் பாரி

முசுக்கலை பறித்து உண்டு கிழித்து எறியும் பலாப்பழம் குறவர்க்குப் பலநாள் வைத்து உண்ணும் உணவு ஆகும். அத்தகைய வளம் மிக்க மலை நாட்டுத் தலைவன் நீ; வள்ளல் பாரி.

வாழும்போது கலந்து பழகிய உறவை நீ எவ்வாறு அடியோடு மறந்து விட்டாய்? என்னை ஏன் வெறுத்து ஒதுக்கி விட்டாய். நீ மட்டும் உயிர் பிரிந்து உலக வாழ்வை நீத்து விட்டாய். அதுதான் புலப்பபடவில்லை.

ஆண்டுகள் பல எனக்கு வேண்டிய உதவிகள் செய்து காத்தாய். ஆதரித்தாய்.

பெருமை மிக்க நட்பு அதனை எவ்வாறு மறந்து விட்டாய் ‘என்னோடு உடன் நீ வராதே நிற்க’ என்று கூறி என்னைத் தடுத்துவிட்டாய்.

வாழ்வில் இயைந்த நான் உன் சாவில் கலக்க இடம் அளிக்க மறுத்து விட்டாய். உனக்கு வேண்டாதவன் ஆகிவிட்டேன்.

ஊழ் மறுபடியும் இந்தப் பிறவியில் ஒன்று சேர்ந்து வாழ வைத்தது; அதுபோல் மறுமையில் ஒன்று சேர்த்து வைப்பதாக