பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



அடுத்த பிறவியிலாவது நாம் மறுபடியும் ஒன்று கூடுவோம்; அதற்கு ஊழ் உதவுவதாக

கலை உணக் கிழிந்த முழவு மருள், பெரும் பழம் சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் மலை கெழு நாட! மா வண் பாரி! கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ எற் புலந்தனை ஆகுவை-புரந்த ஆண்டே பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, ஒருங்கு வரல் விடாது, ‘ஒழிக” எனக் கூறி, இனையைஆதலின் நினக்கு மற்று ய்ான் மேயினேன் அன்மையானே. ஆயினும், இம்மை போலக் காட்டி, உம்மை இடை இல் காட்சி நின்னோடு உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே

திணை - அது துறை - கையறுநிலை.

வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.

237. இள வெளிமான்

‘நீடு வாழ்க’ என்று யான் நெடிய வாயிலை அடைந்து வெளிமானைப் பாடி நின்ற பசி நாட்களில் அவன் கோடைக் காலத்துப் பெய்யும் மழையைப் போல் பொய்க்காமல் தந்து உதவியவன்.

அத்தகைய மேலோனை நாடி அவன் தரும் பரிசுக்காகக் காத்துக் கிடக்கிறோம்.

இந்தப் பரிசிலர் தம் பசி தீர்ந்து உண்ணட்டும் என்று விட்டு வைக்காமல் பாழுங் கூற்றம் அவனை அழைத்துக் கொண்டது. அறன் அற்ற கூற்றம் எங்கள் வாழ்க்கையை வறன் உறச் செய்து விட்டது.

அவன் மனைவியரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறி அழ அவர்களைத் தனிமையில் ஆழ்த்திவிட்டது.