பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

259



ஆக்கி வைத்த சோறு அதைத் திறந்து பார்த்தபோது சோறு இல்லை; வெறும் நெருப்புதான் கிளம்பியது. நச்சி வந்த அவனைக் காணவில்லை. நச்சு போன்ற இளையன் நீ தான்

கிடைத்தாய்.

அண்ணனைக் காண வந்த இடத்தில் அவன் தம்பி நீ இருக்கிறாய்;

அவன் உயிர் பறித்த கூற்று வாழட்டும்!

அவன் மறைந்த பிறகு இனியாம் இங்கு இருந்து கொண்டு நீ இடும் சிறு பரிசிலைப் பெற்றுக் கொண்டு வாழ விரும்போம்.

யானை வேட்டைக்குச் செல்லும் புலி அது பசித்தாலும் எலியை நாடிச் செல்லாது. அதுபோல யாமும் பெரும் பரிசில் பெறச் செல்வோமே அன்றிச் சிறுமதி படைத்தவரை அண்டிக் கையேந்த மாட்டோம்.

நெஞ்சே! கடலை நோக்கிப் பாயும் ஆறுபோல யாம் செல்வோம். தக்கவனை அடைந்து மிக்க பரிசிலைப் பெறுவோம். சோர்ந்து கிடக்க வேண்டாம் . இங்கு இருந்து யாதும் பயனில்லை.

“நீடு வாழ்க! என்று, யான் நெடுங் கடை குறுகிப், பாடி நின்ற பசி நாட்கண்ணே, கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகிப், பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என நச்சி இருந்த நசை பழுதாக, அட்ட குழிசி அழற் பயந்தாஅங்கு, ‘அளியர்தாமே ஆர்க’ என்னா அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற, முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக் கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: ஆங்கு அது நோய் இன்றாக ஓங்கு வரைப்