பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று நனியுடைப் பரிசில் தருகம், எழுமதி, நெஞ்சே துணிபு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை,

வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச, இள மெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

238. வெளிமான்

கழுகின் சேவலும், பொகுவல் என்னும் பறவையும் தாழிப் பானையின் மீது அமர்ந்திருக்கின்றன. காக்கையும், பேராந்தையும் சேர்ந்து திரிகின்றன. பேய் நடமாட்டம் மிக்குள்ள சுடுகாட்டை நோக்கி வெளிமான் சேர்ந்து விட்டான். இன்று அவனுக்குக் கள் வழிபாடு செய்கின்றனர்.

அவன் காதல் மனைவியர் வளையல்கள் நீங்கப் பெற்றுப் பழைய அழகு வாடி வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். பாடும் சுற்றம் வருந்தி மெலிந்து விட்டனர். இவர்கள் பெரு வருத்தம் அடைய அவன் இவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டான்.

முரசங்கள் ஒரு காலத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அவை கிழிபட்டுக் கிடக்கின்றன. யானைகள் பாகர் மேலே அமர்தல் இன்றித் தனிமை உற்றன. மருப்புகள் இழந்து விட்டன.

வெம்மைமிக்க கொடிய கூற்றம் அவன் உயிரைப் பருகி விட்டது என்பது அறியாமல் யான் இங்கு வந்து சேர்ந்தேன். உள்ளம் தடுமாகிறேன். கலங்குகிறேன். கண்ணில்லாத ஊமன் கடலில் கலம் கவிழ விழுந்தால் கலங்குவான் அதைப் போல இச்சுற்றத்தினரைக் காக்க வழி தெரியாமல் அவலத்தில் சூழ்ந்துள்ளேன்.

கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த

செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா,

வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்,

பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்