பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

261



காடு முன்னினனே, கள் காமுறுநன்; தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடிப், பாடுநர் கடும்பும் பையென்றனவே; தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; வெந் திறல் கூற்றம் பெரும் பேதுதுறுப்ப, எந்தை ஆகுதல் அதன் படல் அறியேன், அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் கண் இல் ஊமன் கடற் பட்டாங்கு, வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, அவல மறு சுழி மறுகலின், தவலே நன்றுமன், தகுதியும் அதுவே.

திணையும் துறையும் அவை.

வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.

239. நம்பி நெடுஞ்செழியன்

புகழ்பட வாழ்ந்தவன் இவன். அவனை வாளால் இரு கூறுபடுத்தித்தான் அவனுக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்பது இல்லை. அவனைஅப்படியே புதைத்தாலும் ஒன்றுதான். தலைவேறு ஆக இருகூறுபடச் சிதைத்தாலும் ஒன்றுதான். அவன் சாதித்தவை பல. சுட்டு எரித்தாலும் அவன் உடம்பு மண்ணில் மறையலாம்; அவன் புகழ் என்றும் நிலைத்திருப்பது.

அவன் வாழ்ந்த காலம் அவன் செயல்பாடுகள் இவை. அவன் தோள் தொடி அணியப் பெற்றுப் பொலிவுடனே திகழ்ந்தவன். மணம்மிக்க சோலைகளுக்குச் சென்று பூப்பறித்து அவற்றைச் சூடிக் கொண்டவன். மணம் கமழும் சாந்தினைத் தன் மார்பில் பூசிக் கொண்டவன். தன்னுடன் மாறுபட்டு எதிர்த்தவரை அவர் கிளைகளுடன் அழித்தவன். தன்னிடம் நட்புப் பாராட்டுபவரை உயர்த்திப் பேசியவன்; தம்மினும் வலியர் என்பதால் அவர்கள் பின்சென்று புகழ்ந்து பேசாதவன். தம்மினும் எளியர் என்பதால் அவர்களிடம் தன் மிகுதியைப் பேசாதவன்.