பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பிறரைத் தான் அடைந்து இரப்பது அறியான். இரப்பவர்க்கு மறுத்து அறியான். அரசர்கள் கூடி இருக்கும் அவையத்தில் மிக்க புகழை வெளிப்படுத்தியவன். -

தன்னை எதிர்நோக்கி வரும் படையைத் தடுத்து நிறுத்தியவன். தான் எதிர்த்துப் போராடும் படைகளைப் புறம் காணும்படி செய்தவன். அவர்கள் உயிர் தப்பி ஒட வைத்தவன்.

குதிரைகளை விரைவாக ஒடச் செலுத்தியவன். களிறுகள் ஊர்ந்தவன். நெடுந் தெருக்களில் தேர்கள் செலுத்தியவன். இன்சுவை மிக்க கட்குடங்களைப் பலருக்கும் பகிர்ந்து அளித்தவன். பாணர்கள் மகிழ்வு அடைய அவர்கள் பசி தீர்த்தவன். நடுநிலை பிறழாது எதையும் பேசியவன்; அவன் பேச்சில் தெளிவு இருந்தது.

அவன் வாழ்ந்த நாட்களில் உலகுக்குச் செய்ய வேண்டிய நன்மைகள் யாவற்றையும் செம்மையுறச் செய்தான். அவன் வாழ்வு முழுமை கண்டது; நிறைவு உடையது. சாதனை மிக்கது. அவன் புகழ் என்றும் நிலைத்து நிற்பதாகும். அவன் வாழ்வு முழுமை பெற்றதாகும். வெற்றி கண்டது.

தொடியுடைய தோள் மணந்தனன்;

கடி காவில் பூச் சூடினன்;

தண் கமழும் சாந்து நீவினன்;

செற்றோரை வழிதபுத்தனன்;

நட்டோரை உயர்பு கூறினன்;

‘வலியர் என, வழிமொழியலன்;

மெலியர் என, மீக்கூறலன்

பிறரைத் தான் இரப்ப அறியலன்;

இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்,

வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்;

வருபடை எதிர் தாங்கினன்;

பெயர்படை புறங்கண்டனன்;

கடும் பரிய மாக் கடலினன்;

நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;

ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்,

தீம் செறி தசும்பு தொலைச்சினன்;