பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

263



பாண் உவப்பப் பசி தீர்த்தனன், மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன் ஆகலின்இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ! பழி வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!

திணையும் துறையும் அவை. நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.

240. ஆய் அண்டிரன்

குதிரையும் களிறும் தேரும் வளம்மிக்க நாடும் ஊரும் புலவர்க்கு பரிசிலாகத் தந்தவன் ஆய் அண்டிரன். அவன் மாண்டு ஒழிய அவனோடு அவன் துணைவியரும் ஒருங்கு மாய்ந்தனர். அவன் துறக்கம் அடைந்தனன்.

மரப் பொந்தில் தங்கி வாழும் ஆந்தை சுட்டுக்குவி என்று

கத்தி ஒசை எழுப்பும் இடுகாட்டில் அவன் சென்று மறைந்து விட்டான். அவனை இட்டுப் புதைத்து விட்டனர்.

அவனை நச்சி வாழ்ந்த புலவர்கள் இனிச் செய்வது யாது? புரவலரைத் தேடி அங்கங்குச் செல்ல முற்பட்டு விட்டனர். கல்லென் சுற்றத்தோடு வாடிய பசியினராகிப் புரவலரை நாடிப் பல திக்குகளுக்கு இனிச் செலவை மேற்கொண்டவர் ஆயினர். பிறர் நாடுகள் நோக்கிச் செலவை மேற்கொள்வார் ஆயினர்.

ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், வாடா யாணர் நாடும் ஊரும், பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, மேலோர் உலகம் எய்தினன் எனாஅப், பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, “சுட்டுக் குவி’ எனச் செத்தோர்ப் பயிரும் கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,