பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் வாடிய பசியராகிப், பிறர் நாடு படு செலவினர்.ஆயினர், இனியே.

திணையும் துறையும் அவை. ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

241. ஆய் அண்டிரன்

திண்ணிய தேர்களை இரவர்க்குத் தந்த புகழ்மிக்க ஆய் அண்டிரன் வருகிறான் என்பதால் விண்ணுலகில் இந்திரன் கோயிலுள் முரசம் பேரொலி செய்ய ஆரவாரம் எழுகிறது. அவனைத் தேவர்கள் வரவேற்கக் காத்திருக்கின்றனர். வாழ்வாங்கு வாழ்ந்தவன்; அதனால் அவனுக்குத் துறக்க வாழ்வு காத்துக் கிடக்கிறது. வானவர் அவனைப் போற்றி வரவேற்பர்.

‘திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், அண்டிரன் வரூஉம் என்ன, ஒண் தொடி வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், போர்ப்புறு முரசம் கறங்க, ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே.

திணையும் துறையும் அவை,

அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

242. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

எதிரிகளைக் கொன்று தன் ஆண்மையை வெளிப்படுத்திய வீரன் சாத்தன் மாய்த்து விட்டான்.

இளைய வீரர் இனிப் பூச்சூடிக் கொள்ளப் போவது இல்லை. மகளிர் இனிப் பூக்களைக் கொய்யப் போவது இல்லை; யாழ் மீட்டி இசை கூட்டி இனிப் பாணர் பூச்சூடிக் கொண்டு பாடப் போவது இல்லை; பாடினியும் பூ அணிந்து கொண்டு பொலிவோடு விளங்கப் போவது இல்லை.