பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

265



ஒல்லையூர் நாட்டின் முல்லையே நீ பூத்து என்ன பயன்? உன்னால் மட்டும் எவ்வாறு பூக்க முடிகிறது? உன்னை இத்துயர் வாட்டவில்லையா?

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்; நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப், பாணன் சூடான்; பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

திணையும் துறையும் அவை. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.

243. ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

இனி நினைத்துப் பார்த்தால் கழிந்த நாட்கள் மீண்டும் வரப் போவது இல்லை; அதை நினைத்துப் பார்த்தால் இரங்கத்தான் வேண்டி உள்ளது.

மணலில் பாவைக்குப் பூப் புனைந்து குளத்தில் நீர் ஆடிய மகளிர். அவர்களோடு கை கோத்துத் தழுவிக் கொண்டும் ஒடி விளையாடியும், ஒய்ந்து கதைகள் பேசியும் கள்ளங் கபடமற்றுப் பழகினோம். அச்சிறுமியரோடு மருத மரத்தின் கிளை மீது ஏறிக் கிணற்றில் நீரில் துடுமெனப் பாய்ந்து கரையவர் மருளவும் நீர்த்திரை பிதிரவும் குளித்து மணல் கொண்ட அந்தக் கல்லா இளமை யாண்டு சென்று மறைந்ததோ தெரியவில்லை.

இனிப் பூண் பூட்டிய தடியை ஊன்றிக் கொண்டு நடுக்குற்று இருமல் இடையே சில சொற்களைப் பேசும் மூதாளர் ஆகிவிட்டோம்.

இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇத், தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, தழுவுவழித் தழீஇத், துங்குவழித் துங்கி, மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு