பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, நீர் நணிப் படி கோடு ஏறிச், சீர் மிகக், கரையவர் மருளத் திரையகம் பிதிர, நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்து மணற் கொண்ட கல்லா இளமை அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோதொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, இரும் இடை மிடைந்த சில சொல் பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?

திணையும் துறையும் அவை, தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது. ஒல்லையூர் கிழான் மகன்

பெருசாத்தானாரிடம் உரையாடல்.

244. கையறு நிலை

பாணர் தம் சென்னியில் பூக்கள் சூடிக் கொள்ளவில்லை;

அதனால் வண்டுகளும் சென்று ஊதவில்லை.

விறலியரும் தன் முன் கையில் தொடிகளை அணிந்து

கொண்டிலர். இரவலர்களும் பாடிச் சென்று பரிசில் பெறச் செல்வது இல்லை.

பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா, விறலியர் முன்கையும் தொடியின் பொலியா, இரவலர் மாக்களும் ... ... .....

திணையும் துறையும் அவை.

245. சேரமான் கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை

பிரிவின் துக்கம் அதற்கு எல்லை காதலி இறந்தால் உடன்

உயிர் விடவேண்டும் என்பது, அதைச் செய்து முடிக்காமல் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேதனை தருகிறது.

கள்ளிச் செடி காடாக வளர்ந்துள்ளது. இந்தச் சுடுகாட்டில்

இங்கே பலரும் காண விறகுக்கு எரியிட்டு அதில் அவளைப் பள்ளி