பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F7

ரா.சீ. 267

கொள்ளச் செய்து விட்டனர். அவள் பற்றி எரிகிறாள். நாங்கள் சுற்றி நிற்கிறோம்.

இதுவா உறவு? உடன் உயிர் விடாத பிணைப்பு: அதற்காக வெட்கப்படுகிறேன். இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது என்ன பிழைப்பு

யாங்குப் பெரிது.ஆயினும், நோய் அளவு எனைத்தே, உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? கள்ளி போகிய களரியம் பறிந்தலை வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, ஒள். அழற் பள்ளிப் பாயல் சேர்த்தி, ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே

திணையும் துறையும் அவை.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு,

246. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

இங்குக் குழுமி உள்ள சான்றோர்களே! உங்கள் போக்கு மாறுபட்டு உள்ளது. சூழ்ச்சி மிக்கது போல் தெரிகிறது. “செல்க’ என்று என்னை அனுப்பி இருக்க வேண்டும. “தவிர்க’ என்று கூறி என்னைத் தடுத்து விட்டீர்.

கைம்பெண் மகளிர் அவர் விடும் கண்ணிர் நீர் அறியாதது இல்லை.

வெந்தும் வேகாததுமான வேளைக்கீரை கலந்த சோறு வெள்ளை எள்ளும் புளியும் இட்டு அட்டது; அணில் வரி போன்ற வெள்ளரிக்காயின் விதை போன்ற சோற்றுத் திரள் நறு நெய் கலவாதது. நீர் ஊற்றிக் கையால் பிழிந்து உண்ணுகின்றனர். படுக்கப் பாய் இல்லை. பருக்கைக் கற்கள் மிக்க கட்டாந்தரை. இதில் படுத்து உறங்க வேண்டும். இது காலத்திற்கும் கைம்பெண்கள் படும் வேதனை.