பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கணவனை இழந்து இவ்வாறு தனித்து வாழ்வதைவிட அவன் எரியும் அழலில் விழுந்து யானும் உயிர் விடுவதே மேலானது ஆகும். எங்களுக்கு அந்த நெருப்பும் தாமரைப் பொய்கையும் ஒன்றுதான். இதை அறிவீராக!

பல் சான்றீரே! பல் சான்றீரே! செல்க’ எனச் சொல்லாது, ஒழிக” என விலக்கும், பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட வேளை வெந்தை, வல்சி ஆகப், பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ, பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுகதில்ல; எமக்கு எம் பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! திணை - அது துறை - ஆனந்தப்பையுள், பூத பாண்டியன் தேவி பெருஞ்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.

247. பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

யானை சுமந்து எடுத்துக் கொண்டு வரும் விறகைக் காட்டில் வாழும் குடிவாசிகள் மூட்டும் நெருப்பு ஒளியில் மான் கூட்டம் வந்து துயில அதை மந்தி சீண்டி எழுப்புகிறது. இத்தேவியின் கோயில் முற்றத்தில் சுடுகாடு நோக்கி விரித்த கூந்தலோடு தனியாக எரியழல் நோக்கி நடக்கிறாள்.

இவள் அரண்மனையில் வாழ்ந்திருந்த காலத்தில் தன் கணவன் தாமதமாக வந்தாலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. நடுக்கமுற்றவள்; அப்படி அஞ்சியவள் இன்று தன் இளமையை ஒதுக்கி வைத்துவிட்டுத் துணிவோடு புறங்காடு நோக்கிச் செல்கிறாள். தனியாகச் செல்கிறாள்.