பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

269 யானை தந்த முளி மர விறகின் கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழப், பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கித், தெருமரும் அம்ம தானே- தன் கொழுநன் முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் சிறு நனி தமியள்ஆயினும், இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே!

திணையும் துறையும் அவை.

அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.

248. ஒக்கூர் மாசாத்தனார்

இந்தச் சிறிய ஆம்பல் இரங்கத்தக்கது ஆகும். இளமைக்

காலத்தில் யாம் உடுத்துக் கொள்ளத் தழை ஆகியது. இனி வளம்

நிரம்பிய வாழ்க்கையைத் தந்த கொழுநன் மாய்ந்து விட்டதால்.

இனிமையல்லாவைகறைப் பொழுதில் ஒவ்வொரு நாளும் உண்ண

ஆம்பல புல்லரிசி உதவுகிறது.

அளியதாமே, சிறு வெள் ஆம்பல்!இளையமாகத் தழை ஆயினவே; இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து, இன்னா வைகல் உண்ணும் அல்லிப் படுஉம் புல் ஆயினவே.

திணை - அது துறை - தாபத நிலை.

ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.

249. தும்பைச் சொகினனார்

நெல்கதிர் முனைபோலும் மூக்கை உடைய ஆரல் மீன் கீழ்ச்

சேற்றில் ஒளித்துக் கொள்கிறது; வாளை மீன் நீர்மேல் பிறழுகிறது;