பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வயல்களில் ஆமைகள் பிறழுகின்றன. சினை முதிர்ந்த வராலையும், கயல் மீனையும் முகந்து எடுத்துக் கொள்கின்றனர்.

அத்தகைய அகன்ற நாட்டை உடைய தலைவன் நேற்றைய நாள் பகுத்து உண்ணப் பலரையும் கூட்டி உணவு உட்கொள்ளப் பேரிடத்தைத் தேர்ந்து எடுத்தான். இன்று உயர்நிலை உலகம் புக அவன் துணைவி புழுதி படிந்த முறம் அளவு சிறிய இடத்தைச் சுத்தம் செய்து அழுத கண்ணளாய்ச் சாணம் கொண்டு அந்த இடத்தை மெழுகுவாள் ஆயினாள்.

கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக், கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் அரிக் குரல் தடாரியின் யாமை மிளிரப், பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, ஒருவழிப்பட்டன்று மன்னே! இன்றே, அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, உயர் நிலை உலகம் அவன் புக வார நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, அழுதல் ஆனாக் கண்ணள், மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.


தும்பி சேர் கீரனார் பாடியது.

250. தாயங் கண்ணியார்

ஒரு காலத்தில் குய் என்ற ஒசையுடன் கொழுந் துவையலு டன் கூடிய சோறு இரவலரைத் தடுத்து நிறுத்தியது. தன்னால் புரக்கப்படுவாரது கண்ணிர் மாற்றிய அத்தகைய குளிர்ந்த நறிய பந்தலில் இன்று அவன் துணைவி கூந்தல் களையப் பெற்று வளையலை நீக்கி விட்டுப் புல்லரிசி உண்கிறாள்.

அவன் வாழ்ந்த காலத்தில் அவன் புதல்வர்கள் சோறு வயிறார உண்பர்; அதன் பின் பருகச் சுவைமிக்க பால் வேண்டுவர்.