பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

271


எப்பொழுதும் ஏதாவது கேட்டு வெறுப்புக் காட்டுவர். இவ்வாறு வாழ்ந்த வாழ்க்கை அது.

இன்று அவன் புறங்காட்டை அடைந்து விட்டான். அதனால் அந்த வீடு பொலிவிழந்து விட்டது.

குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில், புரவலர் கண்ணித் தடுத்த தண் நறும் பந்தர், கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, அல்லி உணவின் மனைவியொடு, இனியே புல்லென்றனையால் - வளம் கெழு திரு நகர்!வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெருங் காடு முன்னியபின்னே.

திணையும் துறையும் அவை, தாயங்கண்ணியார் பாடியது.

251. மாரிப் பித்தியார்

மூங்கில் தழைக்கும் நெடிய மலையில் அருவி யாடி அதன் பின் காட்டு யானை தந்த விறகைக் கொண்டு வேள்விச் செந்தி எழுப்பி முதுகு புறத்தில் தாழும் சடையை இன்று உலர்த்துகிறான். இவன் இன்று தவசியாகச் செயல்படுகிறான்.

ஒவியம் போல் அழகுமிக்க வீட்டில் கொல்லிப்பாவை போல் விளங்கிய இளம் பெண்கள் இவனைக் கண்டு இவனை அடையப் பெறாமையால் மெலிந்து வளையல்களை நெகிழ்த்தனர். அது ஒரு காலம். மகளிரைக் கவர்ந்த அழகன், இவன் இப்பொழுது தவசியாக மாறிவிட்டான். இது வியப்பைத் தருகிறது.

ஒவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின்