பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



கடுந் தெறல் செந் தீ வேட்டுப், புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!

திணை - வாகை துறை - தாபத வாகை

மாரிப்பித்தியார் பாடியது.

252. மாரிப்பித்தியார்

ஒலிக்கும் வெள்ளருவி நீர் அதனை ஏற்றுக் கொண்டதால் அவன் சடை நிறம் மாறித் தில்லந்தளிர் போலப் புன்மை அடைந்து கிடக்கிறது. இன்று இவன் தாளி இலையைப் பறித்துக் கொண்டிருக்கிறான்.

இதற்குமுன் இல் வழங்கும் இள மயில் போன்ற தன் மனைவி மடந்தையைப் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாக விளங்கினான். இனிது இல்லறம் நடத்தியவன்; இன்று தவ வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான். இது வியக்கத் தக்கது.

கறங்கு வெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள் இலைத் தாளி கொய்யுமோனேஇல் வழங்கு மட மயில் பிணிக்கும் சொல் வலை வேட்டுவன் ஆயினன்,முன்னே!

திணையும் துறையும் அவை,

அவனை அவர் பாடியது.

253. குளம்பந்தாயனார்

போருக்குச் செல்லும் வீரர்கள் இளைஞர்கள் பெருமிதத்து டனும் மகிழ்வுடனும், விளங்குகின்றனர். அவர்களோடு ஒருவனாக நீ விளங்க வேண்டியவன் நீ; உயிருக்கு ஒய்வு தந்து சாவினைச் சந்தித்து விட்டாய்.

நீ எனக்கு என்ன சொல்லப் போகிறாய். “அழாதே நீ நம்

ஊர்ச் சுற்றத்துக்கு என் இறப்பினை எடுத்து உரை, வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு இச் செய்தியைக் கொண்டு செல்க.