பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

ரா.சீ. 273

கை வளையல்கள் நீங்க விதவைக் கோலத்துடன் ஊர்போய்ச் சேர்க! அவலம் கொள்ளாதே’ என்று உரைக்கப் போகின்றாய்.

இன்னும் யான் உயிர் விடாமல் இருக்கிறேன். அது கொடிது.

என் திறத்து அவலம் கொள்ளல், இனியே, வல் வார் கண்ணி இளையர் திளைப்ப, ‘நகா அல்’ என வந்த மாறே, எழா நெல் பைங் கழை பொதி களைந்தன்ன விளர்ப்பின், வளை இல், வறுங் கை ஓச்சிக், கிளையுள் ஓய்வலோ? கூறு நின் உரையே!

திணை - பொதுவியல்; துறை - முதுபாலை

குளம்பந்தாயனார் பாடியது.

254. கயமனார்

உன்னோடு சேர்ந்து வந்தவர்கள் இளைஞர்கள் முதியவர்கள்; அவர்கள் மட்டும் போர் முடிந்து வேற்றுப் புலம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றனர்.

நீ ஒருவன் மட்டும் மண்ணில் கிடந்து மேல் ஏழ மறுக்கிறாய்; தட்டிப் பார்க்கிறேன்; விட்டு எங்களைப் பிரிந்து விட்டாய்.

இனிய நீங்கிய என் விளர்த்த கையை மேலே தூக்கி இந்தச் செய்தியைச் சுற்றத்தவர்க்கு யான் எப்படி அறிவிப்பேன்.

உன் அன்னை அவளுக்கும், சுற்றத்தவர்க்கும் நீ ஆலமரம் போல இருந்தாய். பழங்கள் முற்றிய ஆலமரம் பறவைகள் உண்ண மொய்க்கின்றன. அதைப் போல் அவர்களை நீ வளமுடன் வாழ வைத்தாய்.

உன்னையே புகழந்து பேசி உன்னையே நினைந்து நீ தான் கதி என்று வாழும் உன் தாய்க்கு நீ வழியில் கிடந்து விழி திறக்காமல் இருக்கிறாய் என்பதை யான் எவ்வாறு கூறுவேன்! அதற்கு வழி கூறுக. அவள் இரங்கத் தக்கவள்.