பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

புறநானூறு செய்யுளும் செய்திகளும் இளையரும் முதியரும் வேறு புலம் படர,

எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, இடைச் சுரத்து இறுத்த மள்ள விளர்த்த வளை இல் வறுங் கை ஓச்சிக், கிளையுள்,

‘இன்னன் ஆயினன், இளையோன் என்று,

நின் உரை செல்லும்ஆயின், மற்று முன் ஊர் பழுனிய கோளி ஆலத்துப், புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் வளனும் செம்மலும் எமக்கு என நாளும் ஆனாது புகழும் அன்னை யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே!

திணையும் துறையும் அவை.

... கயமனார் பாடியது.

255. வன்பரணர்

துடித்துக் கிடக்கிற உன்னை எடுத்துச் செல்வது எப்படி?

‘அய்யோ என்று அலறுவேன்; புலிக்கு அஞ்சுகிறேன்.

உன்னை வாரி அணைத்து எடுத்துச் செல்ல முனைகிறேன்.

உன் மார்பினை எடுக்கும் ஆற்றல் என்பால் இல்லை.

யான்படும் வேதனை இது; உன்னை இவ்வாறு ஆக்கிய

அறன் இல்லாத கூற்றும் இத்துயரினை அடையட்டும்.

என்ன செய்வது? இங்குக் கிடப்பதால் பயன் இல்லை;

கையைப் பற்றிக்கொண்டு சிறிது மெல்ல நடந்து வருக. மலை நிழலில் சற்றுத் தங்கி இளைப்பாறுவோம்.

“ஐயோ!’ எனின், யான் புலி அஞ்சுவலே, அனைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; என்போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! நிரை வளை முன் கை பற்றிவரை நிழல் சேர்கம் - நடத்திசின் சிறிதே!

திணையும் துறையும் அவை.

வன்பரணர் பாடியது.