பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

275



256. தனிமகள் புலம்பிய முதுபாலை

தாழி செய்யும் வேட்கோவே அச்சு உடைய வண்டி அதன் ஆரத்தில் பொருந்திய சிறு வெண் பல்லி போல இவரோடு பாதைகள் பலவும் கடந்து உடன் வந்த எனக்கும் சேர்த்து ஒரு பெரிய தாழியை இந்த ஈமச் சுடுகாட்டில் வைக்கச் செய்து கொடுப்பாயாக.

இவ்வூரில் காலம் காலமாகக் கலம் செய்யும் கோவே; இதனை வனைந்து கொடு.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!

அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி

அகலிதாக வனைமோ

நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!

திணையும் துறையும் அவை,

257. உண்டாட்டு

பசு நிரை மீட்டு வரச் சென்ற வெட்சி வீரன் இவன். செருப்பிடைச் சிறுபரற் கல் இருப்பதுபோலப் பகைவர்க்கு இவன் துன்பம் விளைவித்தவன். திரண்ட கணைக்கால்; அழகிய வயிறு: அகன்ற மார்பு, பசிய கண்கள்; குச்சுப் புல் போன்று அடர்த்தியாக விளங்கும் கரிய தாடி, செவி மறைக்கும் தாழ்ந்த மயிர்முடி, வில்லோடு விளங்குகிறான் இவன்; முன்பின் அறியப்படாதவன்.

இவன் ஊரைவிட்டு இதற்குமுன் வெளியே சென்றது இல்லை. பகைவர்க்கு அஞ்சிக் காட்டை அரணாகக் கொண்டு மறைந்து கொண்டதும் இல்லை. போர்ப் பயிற்சி இவன் முறை யாகப் பெறாதவன்.

விடியற்காலை பகைவர் பசுநிரைகளைக் கொண்டு

செல்வதைப் பார்த்தான்; அவ்வளவுதான். அவசரப்படவில்லை. சூழ்ந்து எண்ணிச் செயல்பட்டான். பகை வீரர்கள் பசுநிரையை