பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


விட்டு ஓடினர். அவற்றை மடக்கிக் கொண்டு வந்தான். அவை மிகப்பல; அவற்றைத் தான் வைத்துக் கொள்ளவில்லை; பொழுதுவிடியத் தம் மகளிரை மத்தொலி எழுப்பச் செய்திருக்கலாம். அவ்வாறு இன்றி ஊரவர்க்குப் பங்கிட்டுத் தந்தான். இது வியப்புக்குரியது.

செருப்பு இடைச் சிறு பரல் அன்னன், கணைக் கால், அவ் வயிற்று அகன்ற மார்பின், பைங் கண், குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய், செவி இறந்து தாழ்தரும் கவுளன், வில்லொடு, யார்கொலோ, அளியன்தானே தேரின் ஊர் பெரிது இகந்தன்றும் இலனே; அரண் எனக் காடு கைக் கொண்டன்றும், இலனே; காலைப், புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி, கையின் சுட்டிப் பையென எண்ணிச், சிலையின் மாற்றியோனே; அவைதாம் மிகப் பலவாயினும், என் ஆம்-எனைத்தும் வெண் கோள் தோன்றாக் குழிசியொடு, நாள் உறை மத்து ஒலி கேளாதோனே.

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு,

258.உலோச்சனார்

முள்ளை உடைய காரைப் பழத்தைப் போல் புளித்துச் சுவைக்கும் கள்ளைப் பசுநிரைகள் தந்து பெறுவான். அதற்குத் துணையாக வெந்ததும் வேகாததுமான இறைச்சியைத் தின்று முடிப்பதற்கு முன் மற்றோர் புலத்தை நோக்கிச் செல்வான்.

தான் ஒருமுறை தின்று முடிப்பதற்குள் ஊர்ப்புறத்தில் பல பசுநிரைகளைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவான்.

அவன் பசுநிரையோடு உடம்பெல்லாம் துகள் படிய வருவான். அவனுக்காகக்கள்சாடியைப் பத்திரப்படுத்தி வைக்கவும். மற்றுஎவருக்கும் தாராமல் காப்பாற்றி வைக்கவும். கள் இல்லை என்றால் அவன் காய்வான்; கள் வெறியன் அவன்.