பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

277



முட் கால் காரை முது பழன் ஏய்ப்பத் தெறிப்ப விளைந்த தேம் கந்தாரம் நிறுத்த ஆயம் தலைச் சென்று உண்டு, பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த எச்சில் ஈர்ங் கை விற்புறம் திமிரிப், புலம் புக்கனனே, புல் அணற் காளை, ஒரு முறை உண்ணாஅளவைப் பெரு நிரை ஊர்ப்புறம் நிறையத் தருகுவன், யார்க்கும் தொடுதல் ஒம்புமதி, முது கட் சாடி, ஆ தரக் கழுமிய துகளன், காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே!

திணையும் துறையும் அவை,

259. கோடை பாடிய பெரும் பூதனார்

வெட்சிப் படைவீரர் பசுநிரைகளைக் கவர்ந்து சென்று உள்ளனர். அவை முன்னே செல்ல அதன்பின் வில் ஏந்திய மறவர்கள் இலை புதை பெருங்காட்டுள் மறைந்து ஒதுங்கி இருப்பர்.

மறவனே! அவசரப்பட்டு அங்குச் செல்வது தவிர்க தெய்வம் உற்ற புலை மகள்போலத் தாவித் தெறித்துச் செல்லும் பசுநிரை நோக்கி நீ செல்வதைத் தவிர்க; சூழ்ந்து எண்ணிச் செயல்படுக. உன் ஊக்கம் குறைவு பெறாமல் செயல்படுக.

ஏறுடைப் பெரு நிரை பெயர்தரப் பெயராது, இலை புதை பெருங்காட்டுத் தலை கரந்து இருந்த வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய், செல்லல், செல்லல், சிறக்க, நின் உள்ளம், முருகு மெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன்மேல்புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே!

திணை - கரந்தை துறை - செரு மலைதல், பிள்ளைப் பெயர்ச்சியும் ஆம். கோடை பாடிய பெரும்பூதனார் பாடியது.