பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



260. வடமோதங்கிழார்

யாழின் இனிய இசையை எழுப்பாமல் தளரும் நெஞ்சத்தோடு ஊக்கம் குன்றி இருக்கிறாய்.

மனையோள் ஒருத்தி யாரோ விரித்த கூந்தலோடு எதிரே வர அது அபசகுனமாக அமைந்து விட்டது.

அத் தீய சகுனத்துக்கு அஞ்சிக் களர் நிலத்தில் கள்ளி மரத்து நிழலில் உள்ள தெய்வத்தை வாழ்த்திவிட்டுப் பசியுடன் வாடும் வயிற்றினை உடையாய்; நீ கசிந்து கைதொழுது ‘எம் தலைவனைக் காண்பேனோ என்று ஏக்கத்தோடு வினவுகின்றாய்.

பாணனே கேட்பாயாக பிழைப்பது எப்படி? அதைப் பற்றித் தானே உன் சிந்தனை? உன் கையிருப்பு; அது அவன் தந்தது. அதை வைத்துக் கொண்டு காலம் கடத்துக இல்லை இரத்தல்தான் வழி என்றால் அதனைத் தொடங்குக. வேறு பிறரை நாடுக. இவை தவிர வேறு வழியில்லை.

நீ தேடும் தலைவன் அவன் கதை சொல்லுகிறேன் கேள். அடுத்த ஊர்க்காரர்கள். அவர்களை எதிர்த்து அவர்கள் கொண்டு சென்ற பசுநிரையைக் கொண்டு வந்து சேர்த்தான். அரவுக் கோள்பட்ட திங்களை மீட்பது போல் பசுவையும் கன்றையும் மீட்டுக் கொண்டு வந்து சேர்த்தான். அரவு தன் தோலை உரித்து அதனைக் களைந்து போடுவதுபோலத் தன் உடலை மண்மீது போட்டு விட்டு அவன் விண்ணுலக வாழ்வை அடைந்தான்.

காட்டுச் சிற்றாறு; அதன் கரையில் உள்ள கம்பம் காற்று அடித்துச் சாய்வது போல அவன் அம்புகள் தைக்கப்பட்டு அங்கேயே அப்போரின் கண் சாய்ந்து மறைந்தான்.

அவன் பெயரும் புகழும் எழுதிப் பீலி சூட்டிப் பிறர் நடமாட்டம் இல்லாத சிறு இடத்தில் பந்தல் எழுப்பி நடுகல் வைத்துள்ளனர். அதோ அந்தக் கல் இருக்கிறது. வேண்டுமானால் சென்று காண்க.

வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,

விளரி உறுதரும் தீம் தொடை நினையாத்,

தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்