பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.#

279

உளரும் கூந்தல் நோக்கிக், களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப், பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅக், ‘கானலென்கொல்? என வினவினை வரூஉம் பாண கேண்மதி, யாணரது நிலையே: புரவுத் தொடுத்து உண்குவை ஆயினும், இரவு எழுந்து எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், கையுள போலும், கடிது அண்மையவே முன் ஊர்ப் பூசலின் தோன்றித் தன் ஊர் நெடு நிரை தழீஇய மீளியாளர் விடு கணை நீத்தம் துடி புணை ஆக, வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் நிரையொடு வந்த உரையன் ஆகி, உரி களை அரவம் மானத் தானே அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்றுக், கம்பமொடு துளங்கிய இலக்கம்போல, அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே: உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, இடம் பிறர் கொள்ளாச் சிறு வழிப், படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே.

திணை - அது துறை - கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.

வடமோதங் கிழார் பாடியது.

261. ஆவூர் மூலங்கிழார்

இத் தலைவனின் முற்றம் அடையாத வாயிலைக் கொண்டு

விளங்கி இருந்தது. இன்று அது வற்றிய ஆற்றில் தனித்து விடப்பட்ட ஒடம் போல வெறிச்சிட்டுக் கிடக்கிறது. பாழ்பட்டு விட்டது. இதைப் பார்க்கும் என் விழிகள் குருடு ஆகிப் போகட்டும். இது கொடுமைமிக்கது.