பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



இது ஒரு காலத்தில் வருவார் போவார் திகைப்பு அடையும் நிலையில் நெய்யில் ஆட்டு இறைச்சி வறுக்கும் ஒசை கேட்டுக் கொண்டே இருக்கும். புதியவர்கள் இதைக் கண்டு கண் பூப்பர்.

வியப்பில் ஆழ்வர்.

இன்று அவ்வீட்டுத் தலைவன் ஆநிரைகளை மீட்டு வரக் கரந்தை சூடிச் சென்றான். அதனை மீட்டுத் தந்தான். அதில் உயிரையும் தந்தான். அவன் நடுகல் ஆயினான்.

அந்த முற்றம் கணவனை இழந்த கைம்பெண் போலப் பொலிவு இழந்து கிடக்கிறது.

அந்தோ! எந்தை அடையாப் பேர் இல் வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் கண்டனென், மன்ற சோர்க, என் கண்ணே, வையம் காவலர் வளம் கெழு திரு நகர், மையல் யானை அயாஉயிர்த்தன்ன நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் பயந்தனை, மன்னால், முன்னே! இனியே பல் ஆ தழீஇய கல்லா வல் வில் உழைக் குரற் கூகை அழைப்ப ஆட்டி, நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை விரகறியாளர் மரபின் சூட்ட, நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய வென் வேல் விடலை, இன்மையின் புலம்பிக், கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழி கல மகடூஉப் போலப் புல்லென்றனையால், பல் அணி இழந்தே.

திணையும் துறையும் அவை,

ஆவூர் மூலங்கிழார் பாடியது.

262. மதுரைப் போராலவாயார்

பகைவர் தம் படைகளை முருக்கி அவர்களை விரட்டி விட்டுப் பெருநிரை கொண்டு வந்த என் தலைவனும் அவனுடன்