பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

281


சென்ற வீரர்களும் திரும்புகின்றனர். மிக்குக் களைத்து வந்துள்ள அவர்கள் இளைப்பாற அவர்களுக்குப் பந்தல் எழுப்பி மணல் பரப்பி வையுங்கள்; மது அவர்கள் குடிக்கப் பிழிந்து வைக்கவும். இறைச்சி அவர்கள் தின்ன ஆட்டுக்கிடாய்களை வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் வேட்கை தணிய அவர்கள் குடித்து மகிழட்டும்.

நறுவும் தொடுமின் விடையும் வீழ்மின், பாசு.அவல் இட்ட புன் காற் பந்தர்ப் புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்மின்ஒன்னார் முன்னிலை முருக்கிப், பின் நின்று, நிரையொடு வரூஉம் என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. திணை - வெட்சி; துறை - உண்டாட்டு, தலைத்தோற்றமும் ஆம்.

மதுரைப் பேராலவாயார் பாடியது.

263. கையறு நிலை

பசுக் கூட்டத்தைப் பெயர்த்துச் சென்றவரை எதிர்த்து நின்றான். இவன் உடன்சென்ற இளைஞர்கள் ஒதுங்கிவிடத் தான் தனியனாகச் சென்று அவற்றை மீட்டுக் கொணர்ந்தான். எதிரிகளின் வில் உமிழ்ந்த அம்புகளில் மூழ்கி ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும். கற்சிறை போன்று நின்றான்; அவன் கல் ஆயினான்.

களிற்றின் கால் அடி போல் தோன்றும் ஒர்றைக் கண் உடைய பறையை உடைய இரவலனே! நடுகல்லைக் கண்டால் நீ தொழாது செல்லற்க; தொழுதால் வறண்ட வழிப்பாதையும் சோலை வனம் ஆகும். நன்மைகள் பெருகும்.

பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் இரும் பறை இரவல! சேறி ஆயின், தொழாதனை கழிதல் ஒம்புமதி: வழாது, வண்டு மேம்படுஉம், இவ் வறநிலை ஆறேபல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, கல்லா இளையர் நீங்க நீங்கான்,