பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



வில் உமிழ் கடுங் கணை மூழ்கக், கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

திணை - கரந்தை துறை - கையறு நிலை

264. உறையூர் இளம் பொன் வாணிகனார்

பரல் கற்கள் உடைய மேட்டு நிலத்தில் மரல் பூ கொண்டு பூ மாலை தொடுத்து அதனைச் சார்த்திப் பீலி சூட்டிப் பெயர் பொறித்து இனி அவனுக்குக் கல் நட்டுள்ளனர். அவன் நடுகல் ஆயினான்.

கன்றுகளுடன் பசுக்களைக் கொண்டு வந்து நிறுத்திப் பகைவரை ஒட்டி நெடுந்தகை கழிந்தது அறியாமல் இன்றும் அவனை நாடிப் பாணரது சுற்றம் வந்து கொண்டிருக்கின்றது. கொடை மிக்கவன் அவன்.

பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, அணி மயிற் பீலி சூட்டிப், பெயர் பொறித்து, இனி நட்டனரே, கல்லும், கன்றொடு கறவை தந்து பகைவர் ஒட்டிய நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே?

திணையும் துறையும் அவை,

உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.

265.சோணாட்டுமுகையலூர்சிறுகருத்தும்பியார்

ஊருக்கு வெளியே முரம்பு நிலத்தில் வேங்கைப் பூவைப் பனம் நாரில் மாலையாகத் தொடுத்துப் பசு மேய்க்கும் கோவலர்கள் வழிபாடு செய்யக் கல் ஆயினாய்.

நீ கல் ஆயினாய் என்பதில் இழப்புகள் இரண்டு; ஒன்று பரிசில் பெற்று வந்த இரவலர்கள் ஒரு கொடையாளியை இழந்து