பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

283


விட்டது. அவர்கள் செல்வம் இழந்தனர். அடுத்தது போரில் தனக்கு அவ்வப்பொழுது உதவி வந்த வீரனை அவன் உதவியை நாடி வந்த பேரரசர்கள் இழந்தது. அவர்கள் வெற்றியை இழந்தனர்.

ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறுவிப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப், பல் ஆன் கோவலர் படலை சூட்டக், கல் ஆயினையே கடுமான் தோன்றல்!வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர்

ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை,

...சோணாட்டு முகையலூர் சிறு கருந் தும்பியார் பாடியது.

266. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி

மழை பெய்யாது அதனால் வற்றிச் சேறாகக் கிடக்கும் கோடைக் காலத்திலும் ஆம்பல் இலையின் நிழலில் நந்து அதில் ஏறி இளைய சங்கோடு மணம் கொள்ளும் நீர் வளம்மிக்க கழனிகளை உடைய நாடு உனது.

சான்றோர் கூடிய அவையத்துக்குச் சென்று நீதி வழங்குக என்று முறையிடுபவரைப்போல் யான் உன்பால் முறையிடு கின்றேன். விருந்து வந்தால் அவர்களை வரவேற்க முடியாத வறுமை என்னை வாட்டுகிறது. அதனை மாற்றுக என்று முறையிடு கிறேன். என் வறுமையைப் போக்கி அருளுக.

பயம் கெழு மா மழை பெய்யாது மாறிக், கயம் களி முளியும் கோடைஆயினும், புழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல், கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்