பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

புறநானூறு செய்யுளும் செய்திகளும்

வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், ‘ஆசு ஆகு’ என்னும் பூசல் போல, வல்லே களைமதி அத்தை - உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப், பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் அறிவு கெட நின்ற நல்கூர்மையே!

திணை - பாடாண் திணை, துறை - பரிசில் கடாநிலை.

சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருஞ்குன்றுர் கிழார்

பாடியது.

(267, 268 பாட்டுகள் பிரதிகளில் காணப்படவில்லை)

269. ஒளவையார்

குயிலின் அலகு போன்ற அதிரல் முகையைக் கரிய முடியில்

சூட்டிக் கொண்டு புதிய அகலில் பெய்த புலிக்கண் போன்ற வெம்மை தரும் மதுவை ஒரு முறைக்கு இருமுறை இருந்து பருகினாய், வீரர்களும் உடன் இருந்தனர். அடுத்த முறை பருக எடுத்து வைத்தனர். கள் முன்னே வைக்கப்படுகிறது; துடியனின்

பறை ஒலி கேட்கிறது. கரந்தையரை எதிர்த்துப் போர் என்ற செய்தி அழைக்கிறது.

கள்ளா? வாளா? நீ வாளைத் தேர்ந்து எடுத்தாய்.

கரந்தையரை வென்று ஆநிரையை மீட்டுத்தந்தாய். உன் வாள்

அது தந்த வெற்றி இது.

குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் பயிலாது அல்கிய பல் காழ் மாலை மை இரும் பித்தை பொலியச் சூட்டிப், புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, உவலைக் கண்ணித் துடியன் வந்து எனப், பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது