பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

285



கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி: கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் பல் ஆன் இன நிரை தழிஇய வில்லோர்க், கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்பத், தடிந்து மாறு பெயர்த்தது. இக் கருங் கை வாளே.

திணை - வெட்சி; துறை - உண்டாட்டு

ஒளவையார் பாடியது.

270. கழாத் தலையார் (கையறு நிலை)

இடியேறு போல ஒலிக்கும் முரசினையும், யானைக் கூட்டத்தையும் உடையவராகி நிலத்தை ஆட்சி செய்யும் வேந்தர் பெரு மக்களும் மற்றும் பல சான்றோர்களும் போர்க்களத்தில் வந்து கூடி இவனுக்காகக் கண்ணிர் வடிக்கின்றனர்.

இவ்வீரர்களின் தாயே மூதில் மகளே! இதை வந்து பார்; எம் நெஞ்சு பதறுகிறது. கண்டு துயரத்தில் ஆழ்கிறது.

போர்ப் பறை கேட்டு விருப்புற்று வந்து குழுமும் இவ்விளைஞர்களுக்கு வெற்றி அவர்கள் குறிக்கோள்; மன்றத்தினர் பாராட்டு அவர்கள் விரும்பும் பரிசு; அதனால் பேரமர்க்கு வந்து குழுமியுள்ளனர்.

இப்போர்க் களத்தில் கோடரி பாய்ந்த மரம் போல் வாள்மிசை கிடக்கின்றான். இந்த ஆண்மையோர் இவனைப் பாராட்டிச் சிறப்புச் செய்ய வந்தது காண்க.

பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின், இனம்சால் யானை, நிலம் தவ உருட்டிய நேமியோரும் சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வேநறு விரை துறந்த நாறா நரைத் தலைச் சிறுவர் தாயே! பேரிற் பெண்டே நோகோ யானே; நோக்குமதி நீயே: மறப் படை நுவலும் அரிக் குரற் தண்ணுமை இன் இசை கேட்ட துன் அரு மறவர் வென்றி, தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,