பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, விழு நவி பாய்ந்த மரத்தின், வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.

திணை - கரந்தை; துறை - கையறு நிலை. (கண்டார் தாய்க்குச் சொல்லியது)

கழாத்தலையார் பாடியது.

271. வெறி பாடிய காமக் கண்ணியார்

நீர் மிக்க நிலத்தில் விளையும் கரு நிறத்து நொச்சித் தழை அது மெல்லியல் மகளிர் உடுத்தும் தொடலை ஆவதை இதற்குமுன் பார்த்திருக்கின்றோம்;.

இனி ஒரு புதிய காட்சி; அது அஞ்சத் தகும் குருதியோடு கலந்து உருமாறித் துணிபட்ட மாலையாக விளங்குகிறது. அதனை ஊன் தசை எனக் கருதிப் பருந்து ஒன்று கொண்டு மேலே எடுத்துச் செல்ல யாம் கண்டனம். மறமிகு மைந்தன் மலைந்த செய்தி அதனை நொச்சித் துண்டு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

நீர் அறவு அறியா நிலமுதற் கலந்த கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்துப், பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே!

திணை - நொச்சி; துறை - செருவிடை வீழ்தல்.

வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

272, மோசி சாத்தனார்

நீலமணி கொத்துக் கொத்தாக உள்ளதுபோல் உள்ள

நொச்சியே! பூக்கள் மலரும் பல மரங்களுள் நீ பெரிதும் விரும்பப்படுகிறாய்.