பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

287


காவல் மிக்க நகரத்தில் பெண்கள் உடுக்கும் தழையாக நீ உள்ளாய். அவர்களுக்கு நீ அழகைத் தருகிறாய்.

அதே போலப் பகைவர்கள் அரண்களைத் தாக்கச் செல்லும் மறவர்கள் அவர்கள் சென்னிகளில் சூடிக் கொள்வதும் உன்னையே. அவர்களுக்கு நீ வெற்றியைத் தருகிறாய்.

மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி! போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ நிழற்றிசினே!கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி: காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே.

திணையும் துறையும் அவை. மோசி சாத்தனார் பாடியது.

273. எருமை வெளியனார்

குதிரை வாராது; களம் சென்று போர் செய்யச் சென்ற குதிரை இனி திரும்ப வரப் போவது இல்லை.

மற்றைய வீரர்கள் ஊர்ந்து சென்ற குதிரைகள் திரும்பி விட்டன. இந்தப் புல்லுளைக் குடுமிச் சிறுவன் தந்தை ஊர்ந்து சென்ற குதிரை திரும்பி வரவில்லை.

இரு பேர் யாறுகள் சந்திக்கும் கூடலில் குறுக்கே அணையிடும் பெருமரம்போல் அவன் ஏறிச் சென்று மலைந்த குதிரை பட்டு விழுந்து விட்டதோ இன்னும் வந்து சேரவில்லை.

மா வாராதே, மா வாராதே; எல்லார் மாவும் வந்தன எம் இல், புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மா வாராதேஇரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் விலங்கிடு பெரு மரம் போல, உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?

திணை - தும்பை, துறை - குதிரை மறம்.

எருமை வெளியனார் பாடியது.