பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

புறநானூறு செய்யுளும் செய்திகளும்


உன் காலில் உள்ள கழல் எருதின் கொம்புகள் போல்

பிளவுபட்டு உள்ளது.

நின்தோல் (கேடயம்) துளைபட்டுப் பயிற்சியாளர் அம்பு

எய்து பழகும் இலக்குப் பலகை போல் காட்சி அளிக்கிறது.

குதிரையின் திறந்தவாய் சிவந்து காணப்படுவது எருதினை வவ்விய புலியின் வாய்போல் உள்ளது.

உன்யானைகள் அவற்றின் கொம்புகள் மழுங்கி எதிரி களுக்குக் கூற்றுவனைப் போல் அச்சம் ஊட்டுகின்றன.

நீ குதிரை பூட்டிய தேரில் வந்து காட்சி அளிப்பது காலைக் கதிரவன்போல் அழகு தருவதாக உள்ளது.

உன்னை எதிர்த்தவர் நாட்டில் வாழ்வோர் தாயற்ற குழந்தைகள் பால் இல்லாமல் வருந்துவது போலக் கூவி அரற்றுவர்.

வாள், வலம் தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப்போன்றன; தாள், களம் கொளக் கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறி பதத்தான் இடம் காட்டக் கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறு, கதவு எறியாச் சிவந்து, உராஅய், நுதி மழுங்கிய வெண் கோட்டான், உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; நீயே, அலங்குஉளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, மாக் கடல் நிவந்து எழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோஅணையை ஆகன்மாறே, தாய் இல் துவாக் குழவி போல, ஒவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை. சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.