பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

293


281. அரிசில் கிழார்

நாட்டு அரசன் அவன் நலிவு பெறாமல் இருக்க விழுப்புண் பட்டான். வீரன் அவன் உற்ற புண்ணைக் காக்கத் தோழி! நாம் பூசை வழிபாடுகள் செய்வோம் வருக.

வீட்டு முகப்பில் இனிய கனிகளைத் தரும் இரவமொடு வேப்பம் இலைகளைச் செருகியும், அவனுக்கு மையிட்டும் வெண் சிறு கடுகு தூவியும், ஆம்பலம் குழல் ஊதியும், மணி ஒசை எழுப்பியும், வீடு முழுதும் நறுமணம் புகை பரப்பியும் இவ்வீரன் பட்ட புண்ணைக் காப்போமாக, பேய் தொட்டு அவனை வருத்தாமல் காப்போமாக.

தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்கக் கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇக், காக்கம் வம்மோ- காதல்அம் தோழி!வேந்துறு விழுமம் தாங்கிய பூம் பொறிக் கழற் கால் நெடுந்தகை புண்ணே.

திணை- காஞ்சி; துறை - பேய்க்காஞ்சி. அரிசில் கிழார் பாடியது.

282. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ

வேல் மார்பில் பாய்ந்து தன் தலைவனுக்காக் உயிர் விட்ட வீரனை யாங்குளன் என்று வினவுவாய் ஆயின்,

பகை வீரர்கள் விட்ட கணைகள் அவன் மார்பைத் துளைத்து அவன் உடலைச் சிதைத்து விட்டன. அவன் தோற்றமே இல்லாமல் அவனைக் கிழித்துச் சிதைத்து விட்டனர். அழித்து விட்டனர்.