பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 புறநானூறு செய்யுளும் செய்திகளு

அவன் உட்ம்பு அழிந்தது. அவன் புகழ் அழியாது. அவன் தன் புகழை நிலை நிறுத்திப் புலவர் நாவில் அவன் நிலை பெற்று விட்டான். புலவர்கள் பாடும் புகழ் அவனை நாடி வந்துள்ளது.

எஃகு உளம் கழிய, இரு நில மருங்கின், அருங் கடன் இறுத்த பெருஞ் செய்ஆளனை, ‘யாண்டு உளனோ?” என, வினவுதிஆயின்,

வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் அருங் கடன் இறுமார் வயவர் எறிய, உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே: மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத்

அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகை அல்லது, களத்து ஒழியாதே; சேண் விளங்கு நல் இசை நிறீஇ, நா நவில் புலவர் வாய் உளானே.

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியது.

283. அண்டர்நெடுங் கல்லினார்

செங் குரலிக் கொடி நிறைந்த நீர் நிலையைக் கலக்கி நீர் நாய் வாளையை உணவாகப் பெறுகிறது; அங்கு உகளும் நீர்ப் பாம்புகளை வரால் என மயங்குகிறது: அதில் உள்ள ஆமைகளோடும் மாறி மாறிப் பொருகிறது. இத்தகைய சிறப்பு உடைய ஊர் அழும்பில் என்பது.

இவ் அழும்பில் வீரன் தன் நண்பனுக்காகக் கோசர் அவைக்கண் சென்று பொருகிறான். தன் நண்பன் அடிபட்டுத் துடிக்கின்ற செய்தி கேட்டு அவனை மீட்க இவன் ஒடுகிறான்.

கழன்று விழுந்த வண்டியின் சக்கரம் அதன் நடுக்குடத்தில் பதிந்துள்ள ஆரைகளைப் போல இவன் மார்பில் வேல்கள் தைத்துக் கிடக்கின்றன.

களம் சென்ற இவ் அழும்பில் வீரன் அவன் விழுப்புண் பட்டு வேதனை உறுகிறான். தெற்றி ஆடும் இளம் பெண்கள்