பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா.சீ.

295


இவனைப் பேணிக் காக்கின்றனர். இவன் தும்பையைத் தலைமாலையாகச் சூடியுள்ளான். அது கலையாமல் இவனுக்கு

அழகு சேர்க்கிறது.

ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, வாளை நீர்நாய் நாள் இரை பெறுஉப் பெறாஅ உறை அரா வரா அலின், மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், வலம் புரி கோசர் அவைக் களத்தானும், மன்றுள் என்பது கெடதானே பாங்கற்கு ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இலங்க, உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவரத், தெற்றிப் பாவை திணி மணல் அயரும் மென் தோள் மகளிர் நன்று புரப்ப, இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.

திணை - தும்பை, துறை - பாண் பாட்டு.

அடை நெடுங் கல்வியார் பாடியது.

284. ஒரம் போகியார்

வருக போருக்கு என்று தூதுவர் வந்து இசைக்க நூலால் கட்டிய மாலையைத் தலையில் சூடிக் கொண்டு காலால் நடந்து களத்துக்குச் செல்கிறான் முதுகுடிப் பிறந்த வீரன்.

தன்னை எதிர்க்க வரும் யானையை வேல் கொண்டு தாக்கி வீழ்த்துகிறான். வேல் கோணல் பெற அக்கோணலை இறந்து வீழ்ந்த களிற்றின் மருப்பில் இட்டு நிமிர்த்துகிறான். மறுபடியும் வேலைக் கையில் தாங்கி நிற்கத் தோற்றவன் அஞ்சிப் புறமுதுகு இடுகிறான். -

அஞ்சி ஒடும் அவனைப் பார்த்து இவன் நகைத்துத் தன் வெற்றியைப் புலப்படுத்துகிறான். இவ் வீரன் பாராட்டுக்கு உரியவன் ஆகிறான்.