பக்கம்:புறநானூறு-செய்யுளும் செய்திகளும்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

புறநானூறு செய்யுளும் செய்திகளும்



‘வருகதில் வல்லே வருகதில் வல்’ என, வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப, நூலரி மாலை சூடிக், காலின், தமியன் வந்த மூதிலாளன் அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத் திரிந்த வாய் வாள் திருத்தாத், தனக்கு இரிந்தானைப் பெயர்புறம் நகுமே.

திணையும் துறையும் அவை,

ஓரம்போகியார் பாடியது.

285. அரிசில் கிழார்

பாசறையில் திரளாகக் கூடியுள்ள பெருமக்களே!

எம் தலைவன் போரில் விழுப்புண் பட்டுத் தரையில் கிடக்கின்றான். அவன் தாங்கி இருந்த வேல் துடியன் கையில் உள்ளது. கேடயம் யாழ் இசைக்கும் பாணன்கையில் உள்ளது. அவன் சூடிய மாலையும் வாடிவிட்டது. அரசன்தன் அமைச்சர்சுற்றமொடு நகரை அடைந்தான்.

அம்பு பட்டு குருதி கொட்ட அவன் நிலத்தில் விழுந்தான்; அவன்தான் வாழுங்காலத்தில் தன்நன்செய் நிலங்களைக் கொடுத்து விட்டதால் அப்பொழுதும் வந்து நின்ற இரவலர் தலைவனுக்கு எஞ்சியிருந்த கரம்பு உடைய புன் செய் நிலம் மிக்க சிற்றுரைத் தந்தான்.

இச்செய்தியைப் பாராட்டிப் புலவர்கள் பேச அப் புகழுரை கேட்டு அவன்தலை குனிந்து கொண்டான்; நாணி நின்றான். அவன் சால்பு பாராட்டத்தக்கது.

பாசறையிரே! பாசறையீரே!

துடியன் கையது வேலே அடி புணர் வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப்